ஆரம்பம் (1974-1979) :
புல்விளை ஏ.ஜி சபையில் சுமார் 30-40 விசுவாசிகளுக்கு போதகராயிருந்த பாஸ்டர் D. சாமுவேல் மிஷனரி அழைப்பு பெற்று 1974 முதல் 1979 வரை 5 ஆண்டுகள் பீகாரில் சென்று குறிப்பாக சாசாராம் என்னுமிடத்தில் ஊழியம் செய்தார். ஒரு வயதான தாய் கொடுத்த 2 தங்கவளையல்களும் சில விசுவாசிகளின் தியாகமான காணிக்கையும் மற்றும் மதுரையில் செய்த ஊழியம் பாஸ்டர் S.S. ஸ்டீபன்-நரிமேடு, பாஸ்டர் தாமஸ் வாக்கர்-கூடல்நகர், ஆகியோரின் காணிக்கையும் உற்சாகமூட்டுதலும் இவரை மிஷனரிப் பணியில் தாங்கியது.
முதல் மிஷனரி பணித்தளம் (1984–1990) தமிழகத்தில் இராமநாதபுரம், தர்மபுரி மாவட்டங்கள் ஆவிக்குரிய நிலையில் மிகவும் பின்தங்கியிருந்தது. இதனை நமது மிஷனரி பணித்தளமாக அறிவித்து இங்கு ஊழியர்களை அனுப்பி சபைகளை ஸ்தாபிக்க சிறப்பு கவனம் செலுத்தப்பட்டது. அன்றைய நமது தலைவர்கள் இம்முயற்சிக்குப் பொறுப்பாக பாஸ்டர் தாமஸ் வாக்கர் அவர்களை நியமித்தனர். இம்முயற்சி விணாகவில்லை. நல்ல பலன் கிடைத்தது.
அறுவடையின் பத்தாண்டு (1991-2000) 10 ஆண்டுகளில் இந்தியாவின் பிற மாநிலங்களுக்கு 50 மிஷனரிகளை அனுப்ப வேண்டும் என்று இலக்கு நியமிக்கப்பட்டு, 100 மிஷனரிகளுக்கும் மேலாக அனுப்ப தேவன் கிருபை செய்தார்.
2001-2020:
Rev.I. ஆசீர், Rev. ஜோஷ்வா மாசிலாமணி, Rev.T.R. ஜான் வின்ஸ்லி ஆகியோரின் தலைமையின் கீழ் Rev.I. ரத்தினம் பால், Rev. பாப்ராஜ். Rev ஜோஷ்வா சுப்பிரமணியன், Rev. ஆலன் ஜான், Rev. ஜேசுராஜ், Rev. கிளாரன்ஸ் ஆதாம், Rev. எட்வின் பிரபாகர். Rev. செல்வசேகர், Rev. தாமரை செல்வன், Rev. சாமுவேல் ஜெபராஜ் ஆகியோர் பல்வேறு காலக்கட்டங்களில் இணைந்து, இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும். யூனியன் பிரதேசங்களுக்கும். அண்டை தேசங்களுக்கும் மிஷன் பிரயாணங்களை மேற்கொண்டனர். பாஸ்டர் I.ஆசீர் அவர்களுடன் மிகவும் உறுதுணையாயிருந்து மிஷன் இயக்க வளர்ச்சிக்கு காரணமாயிருந்த பாஸ்டர் பாப்ராஜ் 2006-ம் ஆண்டு பீகாருக்கு மிஷனரியாக அர்ப்பணித்து அனுப்பப்பட்டார்கள். 1999-ம் ஆண்டு சுமார் ரூபாய் 1.5 லட்சமாக இருந்த பிரதேச மிஷனரி காணிக்கை இன்று 8 கோடியை தாண்டியுள்ளது.
தேவனுக்கே மகிமையுண்டாவதாக. !
2021 முதல்... 2020 ஆண்டில் நமது மிஷன் இலாக்கா இரண்டாக பிரிக்கப்பட்டு வடகிழக்கு மிஷன் இலாக்கா, வடமேற்கு மிஷன் இலாக்கா என்று பிரிக்கப்பட்டு மிஷன் பணி வேகம் பெற்று நடந்து வருகிறது. வடகிழக்கு இலாக்காவிற்கு Rev. A. எட்வின் பிரபாகர் இயக்குநராக நியமிக்கப்பட்டு, உதவி இயக்குநர்களாக Rev. ஜேசுராஜ். Rev.ஜெகில் எபிதாஸ் நியமிக்கப்பட்டனர். வடமேற்கு இலாக்காவிற்கு Rev. தாமரை செல்வன் இயக்குநராகவும், உதவி இயக்குநர்களாக Rev. கலை தேவதாசன், Rev. மனோஜ்-ம் நியமிக்கப்பட்டு பிராந்திய மற்றும் மண்டல பொறுப்பாளர்களுடன் இணைந்து செயல்படுகின்றனர். சுமார் 650-க்கும் மேற்பட்ட மிஷனரிகள் தாங்கப்பட்டு வருகின்றனர்.
தேவனுக்கே மகிமையுண்டாவதாக! ஆமென்.