கிறிஸ்துவின் ஸ்தானிகர்கள்
CHRIST AMBASSADORS
1967ம் ஆண்டு வாலிப சமுதாயத்தின் மீது பாரம் கொண்ட Rev. Stewart Senior அவர்களும், Rev. Dr. C. சகரியா அவர்களும் இணைந்து, செயல்பட்டதின் மூலமாக, Mrs. Guinn மற்றும் Fern Ogle ஆகியோரின் பொருளாதார உதவியின் மூலமாக 1968 ஏப்ரல் 16ம் தேதி முதல் வாலிபர் முகாம் 2 நாட்கள் A.G.. தமிழ்நாடு வேதாகம கல்லூரி வளாகத்தில் வைத்து நடைபெற்றது. இதுவே வாலிபர் முகாமின் ஆரம்பமாகும்.
சபைகளில் உள்ள வாலிபர்கள், ஜெபத்திலும், வேத வாசிப்பிலும், பரிசுத்த வாழ்விலும், ஆத்தும ஆதாயம் செய்வதில் வளர்வதற்காகவும், மற்றும் ஊழியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு வாலிபர் ஊழியம் செயல்பட ஆரம்பித்தது. இதன் பயனாக தற்பொழுது தமிழ்நாட்டிலும், வட இந்தியாவிலும் இருக்கும் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் வாலிபர் முகாம்களில் ஊழிய அழைப்பை பெற்று அர்ப்பணித்தவர்களே!
1967ம் ஆண்டு முதல் Rev. Dr. C. சகரியா, Rev. A. ஆபிரகாம் தாமஸ். Rev.. ஸ்டீவ் ஜெயராஜ், Rev. R. சாமுவேல் ராஜ். Rev. பெஞ்சமின் ஆதாம், Rev. ஜெயச்சந்திரன், Rev. சாந்தராஜ், Rev. I. அலெக்ஸான்டர். Rev. நார்மன் பாஸ்கர், Rev. பிரான்சிஸ் மோகன், Rev. இயேசுதாஸ், Rev. T.C.. நாதன், Rev. தேவதாசன் கலையரசன், Rev. P. ஜேம்ஸ் வில்லிங்சன். Rev. இருதயராஜ், Rev. P. ராபின்சன், Rev. ஜெபராஜ், Rev. கொர்பான்சிங், Rev. அந்தோனிராஜன், Rev. நியூட்டன் டேவிட், Rev. ஆரோக்கிய செல்வன், Rev. B. சாமுவேல், Rev. லின்சே இம்மானுவேல், Rev. D. சாலமன்ஆகியோரின் தலைமையின் கீழ் பல ஊழியர்கள் இணைந்து செயல்பட்டதின் விளைவாக, ஆலமரம் போல் வாலிபர் ஊழியம் தமிழ் பிரதேசத்தில் வளர்ந்துள்ளது.
இப்பொழுது, Rev. A. Stephen Raj அவர்களை தலைமையாக கொண்ட குழுவினர், பிராந்திய மற்றும் மண்டல தலைவர்களோடு சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.
மத்திய வாலிபர் முகாம் (பொங்கல் விடுமுறையில்) மத்திய உபவாச ஜெப முகாம் (பூஜா விடுமுறையில்) மண்டல வாலிபர் முகாம் என முகாம்கள் பல்வேறு நிலையில் நடத்தப்பட்டு, வாலிபர் ஊழியத்தின் நோக்கத்தை நிறைவேற்றி வருகின்றனர். மேலும், “Speed The Light” என்ற திட்டத்தின் மூலம், வாலிபர்கள் கொடுக்கும் காணிக்கையைக் கொண்டு வாகனம் இல்லாத ஊழியர்களுக்கு தேவையின் அடிப்படையில் வாகனங்கள் வாங்கி கொடுக்கப்படுகின்றன. மேலும், Mega Bible Quiz, வேதவினா போட்டிகள், மனப்பாட வசன போட்டிகள், போன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டு வாலிபர்கள் உற்சாகப்படுத்தப் படுகின்றனார். Church Youth Leaders Camp (CYLC) என்ற தலைமைத்துவ பயிற்சியும் தற்பொழுது வாலிப ஊழியத்தலைவர்களை உருவாக்கும் நோக்கத்தோடு செயல்படுத்தப்படுகிறது.